KAVITHAIYIN KADHALAN SIVAKUMAR KAVITHAIGAL
Sivakumarin kavithaigal
Thursday, April 28, 2016
KAVITHAIYIN KADHALAN SIVAKUMAR KAVITHAIGAL
அனுபவம் ...!
தேவையில்லாமல்
அரியர் எழுதினேன் ...
தேர்வறையில்
கவிதை எழுதியதனால் ...
ப.சிவா
Wednesday, April 27, 2016
KAVITHAIYIN KADHALAN SIVAKUMAR KAVITHAIGAL
அவலம்...!
சகுனம் சரியில்லை
வீடு திரும்பினால்
விதவை பெண்
முதிர்கன்னியை
பார்த்தபின் ......
ப.சிவா
Tuesday, April 26, 2016
KAVITHAIYIN KADHALAN SIVAKUMAR KAVITHAIGAL
ஓடை நீரும்
ஒரு நிமிடம்
நின்று
சென்றது ...
அவள்
கடந்து செல்லும்
நொடிப்பொழுதிற்க்காக ....
ப .சிவா
Saturday, April 23, 2016
சொர்க்கத்தின்
வாசற்படி
திறந்தே
இருக்கட்டும்...
நான்
விரைவில் வந்து விடுவேன்...
என் காதலியோடு
நிறைவேறாத
என்
காதல் திருமணம்
சொர்க்கத்திலாவது
நிச்சயமாகட்டும் ....
P.
சிவா
Friday, April 22, 2016
வரம் ....
பிரியா
வரம் வேண்டும் ...
பிரிந்தாலும்
மறவா
மனம்
வேண்டும்....
மறந்தாலும்
மறுநொடியே
மரணம்
வேண்டும் ...
மரணத்திற்கு பிறகு
மறுபிறவி வேண்டும்
அப்போதாவது
நாம்
இணைபிரியாமல்
இருக்க
வேண்டும் ....
ப.சிவா
காதல் .......
புல்லாங்குழலின்
இசை கூட
புதிதாய் தெரிகிறது-
எனக்கு
உன்னை
காதலித்தபின் ....
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)