Tuesday, December 27, 2016

Love failure

கவிதையின் காதலன் சிவகுமார் கவிதைகள்.



காமதேவன் 
கை விட்டுவிட்டான்... 
எமதர்மன் 
வென்று விட்டான்... 

காதல்  தோல்வி...! 

               - ப. சிவா 
கவிதையின் காதலன் சிவகுமார் கவிதைகள். 


பாடங்களை 
அவ்வப்போது 
கவனிக்கிறேன்...  
அவள்  
கண்  சிமிட்டும்  
நேரங்களில்... 

       -     ப. சிவா 



கவிதையின் காதலன் சிவகுமார் கவிதைகள்.



தண்ணீர் பஞ்சம்
தலைக்கீழாய் 
கவிழ்த்து வைத்தனர் 
தண்ணீர் பந்தலில் 
குடிநீர் பானை... 

    - ப. சிவா 
கவிதையின் காதலன் சிவகுமார் கவிதைகள்.



வெற்றுக்காகிதத்தில்
 உன் பெயரை 
எழுதினேன் 
வெட்கத்தில் 
புன்னகைக்கிறது 
காகிதம்... 

 - சிவா. ப 

Monday, December 26, 2016

கவிதையின் காதலன் சிவகுமார் கவிதைகள். 


தீ...! 
மட்டுமல்ல 
நீயும்தான்...! 
சுடுகிறாய் 
உன்னை 
அணைக்கும்போதெல்லாம்... 



             -   ப. சிவா 
கவிதையின் காதலன் சிவகுமார் கவிதைகள். 








பிப்ரவரி - 14

அறுவை சிகிச்சை 
இல்லாமல் இடம் மாறின 
இரு இதயங்கள்
இன்று... 
     
                  - ப.சிவா 


கவிதையின் காதலன் சிவகுமார் கவிதைகள்.



தகரப்பெட்டிக்குள் 
தங்கச் சிலைகள்
நகர்வலம்...
கல்லூரி பேருந்து 





கவிதையின் காதலன் சிவகுமார் கவிதைகள். 












மகளிர் கல்லூரி... 

அழகிகளின் 
அணிவகுப்பு...  
ரசிக்கத்தான் 
முடியவில்லை... 
அருகில்
மனைவி... 

ப.சிவா 

Sunday, December 25, 2016

கவிதையின் காதலன் சிவகுமார் கவிதைகள் .






விடுதலை 
அடைந்தாள்
விலைமாது 
மரணத்திற்கு பின்... .ப.சிவா 


கவிதைகளின் காதலன்  சிவகுமார் கவிதைகள்




விக்கல் எடுக்கிறது 
தண்ணீர் குடிக்க 
மறுக்கிறேன்... 
நினைப்பது நீயாக 
இருந்தால்.... 
நிலைக்கட்டும் 
சில மணி நேரம்... 

            _ ப. சிவா 

Saturday, September 10, 2016

கவிதையின் காதலன் சிவகுமார் கவிதைகள்.




     

 தெய்வத்தை தேடி
 கோவிலுக்கு சென்றேன்
 என் வீட்டில் 
 இருப்பதை அறியாது ...
 அம்மா..!
                                     ப.சிவா 





   
KAVITHAIYIN KADHALAN SIVAKUMAR KAVITHAIKAL...





                                    தீரா...
                                    காதல்தான் 
                                    ஏழையின் வீட்டில் 
                                    வறுமை...

                                                 ப.சிவா 

 கவிதையின் காதலன் சிவகுமார் கவிதைகள். 




இன்று ...
நடந்த கோலப்போட்டியில் 
என்னவளுக்கே...
முதல் பரிசு
கோலத்திற்காக அல்ல  
அதை சுற்றி இருந்த 
அவள் பாதத்திற்காக .... ப.சிவா 

Friday, June 24, 2016

english kiss


      கவிதையின் காதலன் சிவகுமார் கவிதைகள் 













                         முத்தம் ...!


காதலர்கள் 
முத்தம்மிட்டனர் 
காற்றும் 
கோபம்  அடைந்தது...
இடைவெளி 
இல்லாததால் .....
ஆங்கில முத்தம் .

Tuesday, May 24, 2016




KAVITHAIYIN KADHALAN SIVAKUMAR KAVITHAIGAL








என் 
விழிகளுக்குள்ளும் 
வேர்க்கிறது ...
அவளை
நினைக்கும் போதெல்லாம்  
கண்ணீர் ...! 
                               - ப.சிவா 


KAVITHAIYIN KADHALAN SIVAKUMAR KAVITHAIGAL











உனக்காக

எழுதப்பட்டு ...  

உன்னால் நிராகரிக்கப்பட்ட 

என் 

காதல் கடிதங்கள்...

உறங்கி கொண்டுதான்

இருகின்றன...

என் வீட்டு 

புத்தகப்பரணியிலும் ...

என் 

பெற்றோருக்கு தெரியாமல் ... 

                                                   - ப.சிவா 

                       



Thursday, May 19, 2016






KAVITHAIYIN KADHALAN SIVAKUMAR KAVITHAIGAL







இருவரும் தான் 

காதலித்தோம் ...

ஒருவரை ஒருவர் 

இருவரும் தான்...

வாழ்கிறோம் 

ஒருவரை ஒருவர் 

நினைத்து கொண்டு 

தனித்தனியே ...


                           - ப.சிவா 






Tuesday, May 17, 2016





 காதல் செய்தது நீ..
 என்னை ஏன்..
 காயப்படுத்துகிறாய் என 
 மௌனமாய் கேட்டது 
 மரம்... 
 அவள் பெயரை
 ஆணியால் 
 செதுக்கிய  போது...

                                     ப.சிவா 

Friday, May 6, 2016





KAVITHAIYIN KADHALAN SIVAKUMAR KAVITHAIGAL











நிறைவேறா 
ஆசையின் 
பட்டியல் நீண்டது 
உன்னையும்  சேர்த்து ..
வேலையின்மை ..!

                                       ப.சிவா 

                      


KAVITHAIYIN KADHALAN SIVAKUMAR KAVITHAIGAL












பெண்ணே...

இனியும் 
உன் பெயரை 
காகிதத்தில் எழுதாதே ...
எறும்புகள் 
ஏமாற கூடும் ...!                

                         ப.சிவா 







  



KAVITHAIYIN KADHALAN SIVAKUMAR KAVITHAIGAL







நீயாவது ...

என் ஆசையை 

நிறைவேற்றுவாயா 

மரணம் ...!



 உனக்கும் ...
காதல்தோல்வியா 
மை ஒழுகும் 
பேனா ...

ஒரே 
இடத்தில் சுற்றுகிறேன் 
உனக்காகவே...நான் 
மின்விசிறி ...!


நீயாவது 
என்னை காதலியேன் ...
மெழுகு பொம்மை ...




                                             ப.சிவா 

            














Wednesday, May 4, 2016





KAVITHAIYIN KADHALAN SIVAKUMAR KAVITHAIGAL


                         
                     


                          அழகு ...!


               எப்படி சிரித்தாலும் 
               தோற்று போகிறேன் 
               நான் ...
              ஏதாவது 
              ஒரு குழந்தையின் 
              புன்சிரிப்புக்கு 
              முன்னால் ...
                                              - ப.சிவா 

Thursday, April 28, 2016




KAVITHAIYIN KADHALAN SIVAKUMAR KAVITHAIGAL












                                        அனுபவம் ...!

                                  தேவையில்லாமல் 
                                  அரியர் எழுதினேன் ...
                                  தேர்வறையில் 
                                   கவிதை எழுதியதனால் ...
                                                                                           ப.சிவா 

Wednesday, April 27, 2016






                                  
                                      
அவலம்...!

                                சகுனம் சரியில்லை 
                                வீடு திரும்பினால் 
                                விதவை பெண் 
                                முதிர்கன்னியை 
                                பார்த்தபின் ......
                                                                ப.சிவா 
                                

Tuesday, April 26, 2016



KAVITHAIYIN KADHALAN SIVAKUMAR KAVITHAIGAL







ஓடை  நீரும் 
 ஒரு நிமிடம்
         நின்று சென்றது ...
அவள் 
    கடந்து செல்லும் 
                       நொடிப்பொழுதிற்க்காக ....  

                                                                              ப .சிவா 

Saturday, April 23, 2016














சொர்க்கத்தின் 
வாசற்படி 
திறந்தே இருக்கட்டும்...
நான் 
விரைவில் வந்து விடுவேன்... 
என் காதலியோடு 
நிறைவேறாத 
என் 
காதல் திருமணம் 
சொர்க்கத்திலாவது 
நிச்சயமாகட்டும் ....

                      P.சிவா 

Friday, April 22, 2016





                                     வரம் ....


பிரியா 
வரம் வேண்டும் ...
பிரிந்தாலும் 
மறவா 
மனம்  வேண்டும்.... 
மறந்தாலும் 
மறுநொடியே 
மரணம்  வேண்டும் ...
மரணத்திற்கு பிறகு 
மறுபிறவி வேண்டும் 
அப்போதாவது 
நாம் 
இணைபிரியாமல் 
இருக்க வேண்டும் .... 
                                                 ப.சிவா 






காதல் .......




புல்லாங்குழலின் 
இசை கூட 
புதிதாய் தெரிகிறது-எனக்கு


உன்னை 
காதலித்தபின் ....