Thursday, August 13, 2015

KAVITHAIYIN KADHALAN SIVAKUMAR KAVITHAIGAL



அம்மா



  • நான் வாசித்த
    முதல் கவிதை
    அம்மா !
  • நான்
    கருவறையில்
    இருந்தபோதே
    என்னைக்
    காதலித்தவள்
    என் அம்மா !
  • எனக்கு உயிரோட்டம்
    கொடுத்தவளைப் பற்றி 

    நான் உச்சரித்த 
    முதல் வார்த்தை 
    அம்மா !
  • ஒரே பிரசவத்தில்
    இரண்டு குழந்தைகள் 

    நானும் என் தாயும்…

  • அளவுக்கு மிஞ்சினாலும்
    நஞ்சு ஆகாது 

    அம்மாவின் பாசம்…

  • பத்து மாதம் சுமந்தவளுக்கு பரிசாய் கிடைத்தது 
    பச்சிளம் குழந்தையின் 
    புன் முறுவல்…

  • பசியென கேட்காத வயதில்… 
    என் பசியைப் போக்கிய 
    அண்ண பூரணி ! 
    அம்மா !

  • கூட்டத்தில் இருந்தபோதும் யாருக்கும் பயமில்லை 
    பளிச்சென முத்தம் 
    கொடுத்தாள்… 
    தாய் தன் சேய்க்கு…

  • இன்றைய பொழுது இனிதாய் இருக்கும் 
    உன்னை நினைத்து 
    துயில் எழுந்தாள்…

  • புதுப்பேனா வாங்கி 
    எழுதிப் பழகினேன்… 
    என் பெயரையல்ல 
    அம்மாவின் 
    பெயரை…

  • மகிழ்ச்சியுடன்
    ஏற்றுக்கொள்வேன்… 

    எனது மரணம் 
    உனது மடியில் 
    என்றால்…

  • கருவறையில் என்னை 
    சுமந்தவளுக்கு
    கடைசி இடம் 
    கல்லறையென்றால்… 
    முதலில் 
    நான் இறக்கிறேன்… 
    கல்லறையில் அவளை
    சுமப்பதற்க்காக…
 

No comments: