KAVITHAIYIN KADHALAN SIVAKUMAR KAVITHAIGAL
Sivakumarin kavithaigal
Tuesday, December 27, 2016
Love failure
கவிதையின் காதலன் சிவகுமார் கவிதைகள்.
காமதேவன்
கை விட்டுவிட்டான்...
எமதர்மன்
வென்று விட்டான்...
காதல் தோல்வி...!
- ப. சிவா
கவிதையின் காதலன் சிவகுமார் கவிதைகள்.
பாடங்களை
அவ்வப்போது
கவனிக்கிறேன்...
அவள்
கண் சிமிட்டும்
நேரங்களில்...
- ப. சிவா
கவிதையின் காதலன் சிவகுமார் கவிதைகள்.
தண்ணீர் பஞ்சம்
தலைக்கீழாய்
கவிழ்த்து வைத்தனர்
தண்ணீர் பந்தலில்
குடிநீர் பானை...
- ப. சிவா
கவிதையின் காதலன் சிவகுமார் கவிதைகள்.
வெற்றுக்காகிதத்தில்
உன் பெயரை
எழுதினேன்
வெட்கத்தில்
புன்னகைக்கிறது
காகிதம்...
- சிவா. ப
Monday, December 26, 2016
கவிதையின் காதலன் சிவகுமார் கவிதைகள்.
தீ...!
மட்டுமல்ல
நீயும்தான்...!
சுடுகிறாய்
உன்னை
அணைக்கும்போதெல்லாம்...
- ப. சிவா
கவிதையின் காதலன் சிவகுமார் கவிதைகள்.
பிப்ரவரி - 14
அறுவை சிகிச்சை
இல்லாமல் இடம் மாறின
இரு இதயங்கள்
இன்று...
- ப.சிவா
கவிதையின் காதலன் சிவகுமார் கவிதைகள்.
தகரப்பெட்டிக்குள்
தங்கச் சிலைகள்
நகர்வலம்...
கல்லூரி பேருந்து
கவிதையின் காதலன் சிவகுமார் கவிதைகள்.
மகளிர் கல்லூரி...
அழகிகளின்
அணிவகுப்பு...
ரசிக்கத்தான்
முடியவில்லை...
அருகில்
மனைவி...
ப.சிவா
Sunday, December 25, 2016
கவிதையின் காதலன் சிவகுமார் கவிதைகள் .
விடுதலை
அடைந்தாள்
விலைமாது
மரணத்திற்கு பின்... .ப.சிவா
கவிதைகளின் காதலன் சிவகுமார் கவிதைகள்
விக்கல் எடுக்கிறது
தண்ணீர் குடிக்க
மறுக்கிறேன்...
நினைப்பது நீயாக
இருந்தால்....
நிலைக்கட்டும்
சில மணி நேரம்...
_ ப. சிவா
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)